Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சட்ட கல்லுாரிகளில் 'சட்டத்தமிழ்': அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

சட்ட கல்லுாரிகளில் 'சட்டத்தமிழ்': அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

சட்ட கல்லுாரிகளில் 'சட்டத்தமிழ்': அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

சட்ட கல்லுாரிகளில் 'சட்டத்தமிழ்': அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

UPDATED : ஜூன் 25, 2024 04:39 AMADDED : ஜூன் 25, 2024 01:30 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ''அரசு சட்டக் கல்லுாரிகளில், 'சட்டத்தமிழ்' என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.

சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நீதி நிர்வாகம்


 ↓திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை; கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர்; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் ஆகியவற்றில், ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்

 ↓புதுக்கோட்டை திருமயத்தில், தற்போது இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், தனித்தனியாக பிரிக்கப்படும்

 ↓போதை மருந்துகள் மற்றும் மன மயக்க பொருட்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க, திருநெல்வேலியில் சிறப்பு நீதிமன்றம்; கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் மற்றும் மதுரையில், ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் அமைக்கப்படும்

 ↓சென்னையில் நுகர்பொருள் குற்றப் புலனாய்வு துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க, சென்னையில் ஒரு சிறப்பு பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்

 ↓செங்கல்பட்டில் ஒரு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

சிறைத்துறை


 ↓வேலுாரில் உள்ள சிறைக்காவலர் பயிற்சி மையம், திருச்சிக்கு மாற்றப்பட்டு, மாநில சீர்திருத்த நிர்வாகப் பயிற்சி நிறுவனம் ஏற்படுத்தப்படும்

 ↓தஞ்சாவூர் திருமலை சமுத்திரத்தில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும்: சென்னை புழல் மத்திய சிறையில், கூடுதலாக 1,000 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில், கூடுதல் தளம் கட்டப்படும். புழல் மத்திய சிறையில், பார்வையாளர் காத்திருப்பு கூடம் கட்டப்படும்

சட்டத்துறை


 ↓பட்டறைப்பெரும்புதுார் மற்றும் புதுப்பாக்கத்தில் செயல்படும், அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்தாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு சட்டப்படிப்புகள், நடப்பு கல்வியாண்டு முதல் துவக்கப்படும்

 ↓ஆறு அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்து மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்புகளில், தலா 40 மாணவர்கள் வீதம், 480 மாணவர்கள் கூடுதலாக அனுமதிக்கப்படுவர்

 ↓அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளிலும், 'பயிற்சி பேராசிரியர்' என்ற சிறப்பு திட்டம் நடைமுறைக்கு வரும்

 ↓அரசு சட்டக் கல்லுாரிகளில், 'சட்டத்தமிழ்' என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

 ↓சீர்மிகு சட்டப்பள்ளியில் புதிதாக இரண்டு முதுகலை சட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்; தேசிய மற்றும் சர்வதேச அளவில், 'மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டம்' செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us