Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்

UPDATED : ஜூன் 02, 2024 05:23 AMADDED : ஜூன் 02, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் 850ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு விழா நடந்தது.

Image 1276601
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஏர்வாடி முஜாஹிர் நல்ல இப்ராகிம் மஹாலில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு எடுத்து வரப்பட்டது. 45 அடி உயர அலங்காரம் செய்யப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.அதிகாலை 5:30 மணிக்கு தர்காவை ரதம் வந்தடைந்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றிபல்வேறு மாநிலங்களில் இருந்துவந்திருந்தவர்கள் மத நல்லிணக்க விழாவில் பங்கேற்றனர். ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இரவு முழுதும் இயக்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us