தனுஷ்கோடியிலிருந்து கார்கிலுக்கு ராணுவ வீரர்கள் பைக் பயணம்
தனுஷ்கோடியிலிருந்து கார்கிலுக்கு ராணுவ வீரர்கள் பைக் பயணம்
தனுஷ்கோடியிலிருந்து கார்கிலுக்கு ராணுவ வீரர்கள் பைக் பயணம்
UPDATED : ஜூன் 13, 2024 04:11 AM
ADDED : ஜூன் 13, 2024 02:48 AM

ராமேஸ்வரம்:கார்கில் போர் வெற்றி 25வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து கார்கில் வரை 4000 கி.மீ., பைக் பயணத்தை ராணுவ வீரர்கள் நேற்று துவங்கினர்.
லடாக் அருகே கார்கில் மலையில் ஊடுருவிய பாக்., ஆதரவு பயங்கரவாதிகளை 1999ல் மே 3 முதல் ஜூலை 26 வரை இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை விரட்டியடித்து, வெற்றி கண்டனர். இதனை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விழாவாக கொண்டாடுகிறது. 25ம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தை போற்றும் விதமாக நேற்று ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து கார்கில் வரை 4000 கி.மீ., துாரத்தை பயணிக்க 9 டூவீலர்களில் ராணுவ வீரர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
தென்னக ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஸ்ரீநிவாஸ் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ், காஷ்மீர் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா உடன் நடந்த போரில் வீரமரணமடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவவீரர் பழனியின் மனைவி வானதிதேவி பங்கேற்றனர். ராணுவ வீரர்கள் மதுரை, பெங்களூர், மகாராஷ்டிரா, இமாச்சலபிரதேசம், சர்சூ, நயோமா, லடாக் வழியாக ஜூலையில் கார்கில் செல்ல உள்ளனர்.