தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை!
தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை!
தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொலை!

போலீஸ் குவிப்பு
அரைமணி நேர இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நிகழ்ந்ததால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணையை துவக்கினர். டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அரிசி கடத்தல்
மேலும், பிரகதீஸ்வரனும், சதீஷ் மாதவனும் நண்பர்களாகவே பழகியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரது கட்டுப்பாட்டில் இருவரும் இருந்துள்ளனர். அவர் சிறைக்கு சென்றதால், யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டதால், இருவரும் தனித்தனியே ஆட்களை சேர்த்துக்கொண்டு, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
சொத்து தகராறு
இதற்கிடையே, துாத்துக்குடி மாவட்டத்தில், சொத்து தகராறில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் வாலிபர்
தஞ்சாவூர் மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர் விஜய், 25. நடுக்காவேரியை சேர்ந்த அருண்குமார், 28. இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள். இருவரும் நேற்று முன்தினம் நண்பர்களுடன், நடுக்காவேரி அருகே மணகரம்பையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, மது வாங்க சென்றனர். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அருண்குமார், விஜய் இருவருக்கும், யார் முதலில் மது வாங்குவது என, தகராறு ஏற்பட்டது.
தென்காசி பெண்
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டியை சேர்ந்த பரமசிவன், 45, மனைவி உமா, 37, நேற்று முன்தினம் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.
வாட்ச்மேன்
விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அடுத்த சண்முகாபுரத்தில் எஸ்.ஜே., கல்குவாரியில், மதுரையைச் சேர்ந்த ராஜசேகரன், 52, பொள்ளாச்சியை சேர்ந்த மனோஜ்குமார், 38, வாட்ச்மேன்களாக பணிபுரிந்தனர். மொபைல் போன் சார்ஜ் போடுவதில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மனோஜ்குமார் கட்டையால் தாக்கியதில், ராஜசேகரன் தலையில் காயம்டைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
40 வயது நபர்
கடலுார் மாவட்டம், சின்ன கங்கணாங்குப்பம் தனியார் பேட்டரி கடை முன் நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர், ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடலின் அருகே ரத்தக்கறை படிந்த கற்கள் கிடந்தன.
கல்லுாரி மாணவியை குத்திக்கொன்ற காதலன்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வடுகபாளையம், பொன்முத்து நகரை சேர்ந்த கண்ணன் - வனிதா தம்பதியின் மூத்த மகள் அஸ்விகா, 19; மலுமிச்சம்பட்டி தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாமாண்டு மாணவி. நேற்று பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், அஸ்விகா வீட்டில் தனியாக இருந்தார்.