ஆதார் பெயர் திருத்த கட்டணம் அக்.,1 முதல் உயர்வு
ஆதார் பெயர் திருத்த கட்டணம் அக்.,1 முதல் உயர்வு
ஆதார் பெயர் திருத்த கட்டணம் அக்.,1 முதல் உயர்வு
ADDED : செப் 26, 2025 02:06 AM
தேனி:ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கான கட்டண உயர்வு அக்.,1 முதல் அமல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் அட்டை முதல் முறை இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்பின் பெயர், முகவரி, அலைபேசி எண் மாற்றிக்கொள்ளவும், குறிப்பிட்ட வயதிற்கு பின் கைரேகை, கருவிழிப்பதிவினை கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதில் பெயர், முகவரி, அலைபேசி எண், பாலினம், பெயர் திருத்தம் மேற்கொள்ள ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
தற்போது அந்த கட்டணம் ரூ. 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் கருவிழி, கைரேகை புதுப்பிக்க ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கான கட்டணம் ரூ. 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணம் அக்.,1 முதல் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.