தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம்
ADDED : ஜூன் 02, 2025 05:30 PM

சென்னை; தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவமரியாதை செய்திருக்கிறார் என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் தா. மோ. அன்பரசன், தாமதமாக கலந்து கொண்டதோடு, மின்சாரம் தடைபட்டதால், மாணவ மாணவியரை சுமார் 1 மணி நேரம் காத்திருக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அவமரியாதை செய்திருக்கிறார்.
அமைச்சர் தா. மோ. அன்பரசனுக்கு தமிழ் மொழியில் பிழையின்றி எழுதத் தெரியாது என்பது, ஏற்கனவே ஒரு பள்ளி நிகழ்ச்சியில் தெரிந்தது. தேசியக் கொடி குறித்தும் எதுவும் தெரியாது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது, நமது மாணவச் செல்வங்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.