Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் புறக்கணிப்பு வருவாய் துறை அலுவலர்கள் அறிவிப்பு பணியை தொடருவதாக மற்றொரு பிரிவு தகவல்

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் புறக்கணிப்பு வருவாய் துறை அலுவலர்கள் அறிவிப்பு பணியை தொடருவதாக மற்றொரு பிரிவு தகவல்

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் புறக்கணிப்பு வருவாய் துறை அலுவலர்கள் அறிவிப்பு பணியை தொடருவதாக மற்றொரு பிரிவு தகவல்

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் புறக்கணிப்பு வருவாய் துறை அலுவலர்கள் அறிவிப்பு பணியை தொடருவதாக மற்றொரு பிரிவு தகவல்

ADDED : செப் 24, 2025 08:34 PM


Google News
சென்னை:வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பான பெரா, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை இன்று முதல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது; அதேநேரம் மற்றொரு அமைப்பான, 'பெட்ரா' முகாமில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

ஊழியர்களின் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ஒரு நாள் காத்திருப்பு போராட்டம் மற்றும் வேலைப்பளு காரணமாக, இன்று முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக பெரா அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன் கூறியதாவது:

தமிழகம் முழுதும் நடந்து வரும், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமால், வருவாய் துறை அலுவலர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

திட்டம் துவக்கப்பட்ட நாள் முதல், மாவட்ட நிர்வாகத்தினர், வருவாய் துறையினரை, கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றனர். வாரத்தில் ஆறு நாட்கள் முகாம் பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.

ஆய்வு கூட்டம் முகாமில் பெறப்படும் மனுக்களை, அதே நாள் நள்ளிரவிற்குள், 'செயலி'யில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர்.

மேலும், அரசு தரப்பில் முகாம் நடத்த போதுமான நிதி ஒதுக்கவில்லை. இதனால், நிதி நெருக்கடி, இரவு நேர ஆய்வுக் கூட்டம் என, ஏராளமான பிரச்னையில் வருவாய்த்துறை அலுவலர்கள் சிக்கி உள்ளோம்.

அதேபோல், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வருவாய் துறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், தினமும் 2,500 முதல் 3,000 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகின்றன.

அவற்றின் மீது, 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கூறுகிறது. ஆனால், இது சாத்தியமற்றது.

இம்முகாமால், துறை சார்ந்த வழக்கமான பணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

இப்பிரச்னை குறித்து, முதல்வர் முதல் அனைத்து நிலை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

நிறுத்த வேண்டும் திட்டத்தை சிறப்பாக நடத்த, மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான கால அவகாசத்தை 75 நாட்களாக்க வேண்டும். முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். விடுமுறை நாட்களில் முகாம் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் பணியில் ஈடுபட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய்த்துறை சங்கங்களின் மற்றொரு கூட்டமைப்பான பெட்ரா, அரசுக்கு ஆதரவாக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us