கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி: சோதனைச்சாவடியில் ரூ.1.47 லட்சம் லஞ்சம் பறிமுதல்
கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி: சோதனைச்சாவடியில் ரூ.1.47 லட்சம் லஞ்சம் பறிமுதல்
கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி: சோதனைச்சாவடியில் ரூ.1.47 லட்சம் லஞ்சம் பறிமுதல்

கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.47 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் (வெளிசெல்கை) தமிழக ஊழல் (ம) லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் 5 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சதீஸ் ஜெயச்சந்திரன்(48), அலுவலக உதவியாளர் லோகநாதன்(39) ஆகியோரிடம் இருந்து, கணக்கில் வராத லஞ்சம் ரூ.1,47,560 பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.