தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
ADDED : மே 28, 2025 03:24 PM

சென்னை: தங்க நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நெறிமுறைகளால் விவசாயிகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த விதிமுறைகளால் தென் மாநிலங்களில் பல பகுதிகளில் கிராமப்புற நகைக்கடன் விநியோக முறைகளில் இடையூறு ஏற்படும்.
எளிதாக கடன் பெறும் வழியை நேரடியாக குறைக்கிறது. முறைசாரா மற்றும் ஒழுங்குப்படுத்தப்படாத நிறுவனங்களை நோக்கி மக்கள் செல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.