தூத்துக்குடியில் போலீஸ் அவுட்போஸ்ட் மீது தாக்குதல்: மர்ம கும்பலுக்கு வலை
தூத்துக்குடியில் போலீஸ் அவுட்போஸ்ட் மீது தாக்குதல்: மர்ம கும்பலுக்கு வலை
தூத்துக்குடியில் போலீஸ் அவுட்போஸ்ட் மீது தாக்குதல்: மர்ம கும்பலுக்கு வலை
ADDED : செப் 14, 2025 11:22 AM

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் நான்கு வழி சாலையில் உள்ள போலீஸ் அவுட் போஸ்டை (புறக்காவல் நிலையம்) நேற்று இரவு மர்ம கும்பல் தாக்கியது. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாட்டில், திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே அவுட்போஸ்ட் எனப்படும் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு போலீசார் இல்லாத நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை உடைத்தும், அரிவாளால் வெட்டிச் சேதப்படுத்தியும் விட்டுச் சென்றனர்.
இதனை அறிந்த முறப்பநாடு போலீசார், எதிரே உள்ள ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, புறக்காவல் நிலையத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.