அமெரிக்க நிறுவனம் இணைந்து நடத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஏ.ஐ., மாநாடு
அமெரிக்க நிறுவனம் இணைந்து நடத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஏ.ஐ., மாநாடு
அமெரிக்க நிறுவனம் இணைந்து நடத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஏ.ஐ., மாநாடு
ADDED : செப் 14, 2025 10:53 AM

திருப்பத்தூர் : அண்ணாமலை அறக்கட்டளை (அமெரிக்கா), அண்ணாமலை டிரஸ்ட் (இந்தியா), தூய நெஞ்ச கல்லூரி (திருப்பத்தூர்) ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப AI மாநாடு விழா 2025 திருப்பத்தூரில் மிக சிறப்பாக நடைபெற்றது.
காலை 9 மணிக்கு துவங்கிய இந்த விழாவில்,டாக்டர். எம். கிருஷ்ணன், துணைவேந்தர், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அ. நல்லத்தம்பி, எம்.எல்.ஏ., ஆகியோர் விழா படத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர்.
தகவல் தொழில்நுட்ப தொழில் வளர்ச்சி மற்றும் தொழில்-கல்வி மேம்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு மைக் முரளி முன்னிலை வகித்தார். இதில் டாக்டர். பாலா எம்.எஸ். (ஜிசிசி லீடர்), கார்மேகம் ஐ.ஏ.எஸ்., டாக்டர். சுலோச்சனா சதீஷ் (சி.ஓ.இ., மத்திய பல்கலைக்கழகம்) மற்றும் நவீன் குமார், CEO ஆகியோர் கலந்து கொண்டனர்.
பத்மஸ்ரீ டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை விழாவிற்கு தலைமை தாங்கி இளைஞர்களை ஊக்குவிக்கும் உரையாற்றினார்.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர். ஆர்.ஆர். இளங்கோவன் புதுமை குறித்து சிந்தனைகளை பகிர்ந்தார்.
விழாவில் 30-க்கும் மேற்பட்ட ஊக்கமளிக்கும் ஸ்டால்கள் தங்கள் புதுமைகளை கண்காட்சி வாயிலாக காட்டின. ஹாக்கத்தான் போட்டியில் முதல் பரிசான 1 லட்ச ரூபாய்* பரிசை சென்னை கல்லூரி மாணவர்கள் வென்றனர். மேலும், AI in Academy: வெளிநாடுகள் Vs இந்தியா கல்வி முறை என்ற அமர்வு மாணவர்களுக்கு பயனுள்ள அனுபவமாக அமைந்தது.
மொத்தம் 16,000 பங்கேற்பாளர்கள், 50+ நிறுவனங்கள், 30+ தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, திருப்பத்தூரில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய அறிவியல் விழாவாக அமைந்தது.
விழாவின் மூளையாக இருந்த பெருமாள் அண்ணாமலை உலகளாவிய அனுசரணைகளை பெற்று விழாவை சிறப்பாக நடத்தியதற்காக பாராட்டப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக நவீன் குமார் (CEO, GWC Data.AI) மற்றும் அவரது குழு சிறப்பான திட்டமிடலை நிகழ்த்தினர். தூய நெஞ்ச கல்லூரி(திருப்பத்தூர்) நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விருந்தினர்களை அன்புடன் வரவேற்றனர். இவ்வாறான விழாக்கள் மூன்றாம் நிலை நகரங்களில் நடைபெற வேண்டும் என டாக்டர். பாலா எம்.எஸ். மற்றும் பெருமாள் அண்ணாமலை வலியுறுத்தினர்.