Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவிலில் தங்க பல்லியை திருட முயற்சி; விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

கோவிலில் தங்க பல்லியை திருட முயற்சி; விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

கோவிலில் தங்க பல்லியை திருட முயற்சி; விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

கோவிலில் தங்க பல்லியை திருட முயற்சி; விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

UPDATED : டிச 03, 2025 09:56 AMADDED : டிச 03, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பழமையான தங்கப்பல்லி சிற்பத்தின் தங்கக் கவசத்தை திருட நடந்த முயற்சி தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தின் உத்தரத்தில், தங்கப்பல்லி, தங்கச்சந்திரன், தங்கச்சூரியன், வெள்ளிப்பல்லி ஆகிய சிற்பங்கள் உள்ளன.

கோவிலில் பல நுாற்றாண்டுகளாக உள்ள இந்த சிற்பங்களின் தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள், சிலைகளை கோவில் அர்ச்சகர்களுடன் சேர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் திருட முயற்சித்துள்ளனர். ஏற்கனவே உள்ள சிலைகளை அகற்றிவிட்டு, அதே போன்ற சிலைகளை வைக்கவும் முயன்றுள்ளனர்.

எவ்வித அனுமதியும் பெறாமல், இதுபோல சிலைகளை மாற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது. பழங்கால பொருட்களை, உரிய அனுமதியின்றி அகற்ற அறநிலையத்துறை சட்டம் தடை விதிக்கிறது.

சிற்பங்கள்

கடந்த நவ., 1ல் கோவிலுக்கு செ ன்று பார்த்தபோது, தங்கப்பல்லி உள்ளிட்ட சிற்பங்கள் ஏற்கனவே மாயமாகி இருந்தன. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன். மறுநாள், காவல் துறையின் சிலை தடு ப்பு பிரிவி டம் புகார் மனுவை அளித்தேன். புகாரை விசாரித்து வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக் கை எடுக்காமல், புகாரை போலீசார் முடித்து விட்டனர்.

உரிய பதிலை போலீசார் அளிக்கவில்லை. எனவே, திருட முயற்சி நடந்துள்ளதாக அளித்த புகாரின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தள்ளிவைப்பு

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, “மனுதாரரின் புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது.

' 'விசாரணையில், சிலை திருட்டு ஏதும் நடக்கவில்லை என தெரியவந்தது. அதையடுத்து, புகார் முடித்து வைக்கப்பட்டது. அதுகுறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,” என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், 'முழு விசாரணை நடத்தாமல் புகாரை முடித்து வைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளேன்.

அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு மாறாக, சிலைகளை மாற்றி உள்ளனர்' என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us