தமிழக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., பொறுப்பாளர் நியமனம்
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., பொறுப்பாளர் நியமனம்
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., பொறுப்பாளர் நியமனம்
ADDED : செப் 26, 2025 02:23 AM
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக, அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.க., உடன் தொகுதி பங்கீட்டு பேச்சை விரைந்து துவக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
எனவே, தமிழக பா.ஜ.,வில், சட்டசபை தேர்தலுக்கான, பா.ஜ., பொறுப்பாளராக, அக்கட்சியின் தேசிய துணைத் தலைவரும், எம்.பி.,யுமான பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளராக விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல் ஆகியோரை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நியமித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைஜெயந்த் பாண்டா, அம்மாநிலத்தில் இருந்து ஐந்து முறை எம்.பி.,யாக தேர்வாகி உள்ளார். முரளிதர் மோகல், மஹாராஷ்டிரா மாநிலம், புனே தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார்.