முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி வழக்கு
முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி வழக்கு
முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி வழக்கு
ADDED : பிப் 06, 2024 07:45 AM
மதுரை: தேனி மாவட்டம் கம்பம் பரணிதரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பி.எஸ்.சி.,-பி.எட்.,படித்துள்ளேன். ஆசிரியர்தகுதித் தேர்வில் முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்கிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 2023 அக்.,25ல் பட்டதாரி ஆசிரியர்கள்/ வட்டார வள மைய ஆசிரியர் பணி நேரடி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிட்டது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. அறிவிப்பிற்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி: ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி மார்ச் 8 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


