தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்; திரளான பக்தர்கள் தரிசனம்!
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்; திரளான பக்தர்கள் தரிசனம்!
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், குரு மகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமர வைத்து ஆதின திருமடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி வந்தனர்.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதினம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 11 நாள் குருபூஜை பெருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு 11 மணியளவில் பெருமை ஆதினம் 27வது குரு மகா சன்னிதானம், திருக்கூட்ட அடியவர்கள் புடை சூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.
ஆதினத்தின் நான்கு வீதிகளிலும், பல்லக்கில் வந்த குரு மகா சன்னிதானத்துக்கு பூரண கும்ப மரியாதை உடன் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். இதில் மதுரை ஆதினம், செங்கோல் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதின இளவரசு சுவாமிகள், தருமை ஆதீனம் திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பட்டினப்பிரவேசம் ஏற்பாடுகளை ஆதின பொது மேலாளர் ரங்கராஜன், கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் ஆதின கோவில்களின் சிப்பந்திகள் செய்திருந்தனர். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கானோருக்கு ஆதினம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.