Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தில் தொடரும் கனமழை; சுவர் இடிந்து ஒருவர் பலி

தமிழகத்தில் தொடரும் கனமழை; சுவர் இடிந்து ஒருவர் பலி

தமிழகத்தில் தொடரும் கனமழை; சுவர் இடிந்து ஒருவர் பலி

தமிழகத்தில் தொடரும் கனமழை; சுவர் இடிந்து ஒருவர் பலி

Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பதிவாகியுள்ளது. கனமழையால் சுவர் இடிந்து விழுந்து மதுரையில் ஒருவர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில், இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:

தர்மபுரி மாவட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி 37

மாரண்டஹள்ளி 23

தர்மபுரி 15

பாலக்கோடு சர்க்கரை ஆலை 10

சேலம் மாவட்டம்

டேனிஷ்பேட்டை 60

தம்மம்பட்டி 44

மேட்டூர் 35.2

ஏத்தாப்பூர் 26

சேலம் 21.9

ஏற்காடு 20.2

தலைவாசல் 13

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் 72.4

தேன்கனிக்கோட்டை 57

நெடுங்கல் 49

சின்னார் அணை 45

சூளகிரி 40

கெலவரப்பள்ளி அணை 30

தளி 30

பரூர் 28

அஞ்செட்டி 15.1

கன்னியாகுமரி

சித்தார் 45.4

திற்பரப்பு 39.6

பேச்சிப்பாறை 37.4

சுண்டக்கோடு 23.6

சிவலோகம் 22.2

அடையாமடை 21

பெருஞ்சாணி 19.6

புத்தன் அணை 17.8

நீலகிரி மாவட்டம்

பந்தலூர் 47

வென்ட்ஒர்த் 44

தேவாலா 37

கோடநாடு 28

கோத்தகிரி 22

அப்பர் பவானி 22

பார்வுட் 18

நடுவட்டம் 16

அப்பர் கூடலூர் 16

கூடலூர் பஜார் 15

கோவை மாவட்டம்

சின்னக்கல்லார் 47

வால்பாறை பிஏபி 27

வால்பாறை தாலுகா ஆபிஸ் 25

சோலையார் 20

சின்கோனா 13

திருப்பூர் மாவட்டம்

மூலனூர் 15

அமராவதி அணை 14

தாராபுரம் 12

ஈரோடு மாவட்டம்

வரட்டு பள்ளம் 44.8

ஈரோடு 16

சத்தியமங்கலம் 15.4

பவானிசாகர் 12.6

சென்னையில் மழை!


சென்னையில் அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், மதுரவாயல், எழும்பூர், கோயம்பேடு, கிண்டி, நுங்கம்பாக்கம், அசோக்நகர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், பழவந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

சுவர் இடிந்து ஒருவர் பலி

மதுரை வலையங்குளம் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்த அம்மாபிள்ளை 65, இவரது பேரன் வீரமணி 10. இவர்களின் பக்கத்து வீட்டுப் பெண் வெங்கட்டி 55. மூவரும் நேற்று அம்மா பிள்ளை வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்தது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூவரும் காயமடைந்தனர்.

மூவரையும் வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெங்கட்டி இறந்தார். அம்மாபிள்ளை, வீரமணி தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். பெருங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us