தி.மு.க. ஐ.டி விங் மாநில துணை செயலாளர் நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு
தி.மு.க. ஐ.டி விங் மாநில துணை செயலாளர் நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு
தி.மு.க. ஐ.டி விங் மாநில துணை செயலாளர் நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு
ADDED : மே 31, 2025 09:56 AM

சென்னை: தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் கட்சியில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் இலக்குவன், கட்சியின் கடடுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் நாளை (ஜூன் 1) தி.மு.க., பொதுக்குழு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள், முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சஸ்பெண்ட் நீக்க அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.