Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'திமுகவின் சமூக நீதி கொள்கை' : அரசு ஊழியரை கவுன்சிலர் காலில் விழ வைத்ததற்கு அண்ணாமலை கண்டனம்

'திமுகவின் சமூக நீதி கொள்கை' : அரசு ஊழியரை கவுன்சிலர் காலில் விழ வைத்ததற்கு அண்ணாமலை கண்டனம்

'திமுகவின் சமூக நீதி கொள்கை' : அரசு ஊழியரை கவுன்சிலர் காலில் விழ வைத்ததற்கு அண்ணாமலை கண்டனம்

'திமுகவின் சமூக நீதி கொள்கை' : அரசு ஊழியரை கவுன்சிலர் காலில் விழ வைத்ததற்கு அண்ணாமலை கண்டனம்

ADDED : செப் 03, 2025 05:23 PM


Google News
Latest Tamil News
சென்னை: திண்டிவனத்தில் நகராட்சியில் திமுக கவுன்சிலர் காலில் அரசு ஊழியர் ஒருவர் விழ வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, இது தான் திமுகவின் சமூக நீதி எனத் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் நகராட்சி அலுவலகத்திலேயே ரம்யாவின் காலில் அவர் விழ வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.இது குறித்து சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த காட்சிகளில் கவுன்சிலர் ரம்யா உள்ளிட்ட 8 பேர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அரசு ஊழியர் ஓரு ஓரமாக நின்று கொண்டு இருந்தார். அப்போது, சேரை நகர்த்திவிட்டு ஊழியர் ரம்யா காலில் விழுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:

இது தான் திமுகவின் சமூக நீதி கொள்கை. திண்டிவனத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அரசு ஊழியரை, திமுக கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு, கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசு ஊழியர்களை திமுக அவமானப்படுத்துவது இது முதல்முறை அல்ல. இது ஒரு தனி சம்பவமும் அல்ல. இதற்கு முன்பு திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன், அரசு ஊழியரை ஜாதி அவதூறுகளால் திட்டியிருந்தார். சமூக நீதி என திமுக சொன்னாலும், உண்மையில் சமீக அநீதியை தவிர வேறு இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வன்கொடுமை வழக்கு

கவுன்சிலர் காலில் ஊழியர் விழுந்த விவகாரம் தொடர்பாக திண்டிவனம் நகராட்சி தலைவரின் கணவர் ரவிசந்திரன், பெண் கவுன்சிலர் ரம்யா உட்பட 5 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us