Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க.,வின் ஓட்டு வெறும் 12 சதவீதம் மட்டும் தான்; அடித்து சொல்கிறார் சீமான்!

தி.மு.க.,வின் ஓட்டு வெறும் 12 சதவீதம் மட்டும் தான்; அடித்து சொல்கிறார் சீமான்!

தி.மு.க.,வின் ஓட்டு வெறும் 12 சதவீதம் மட்டும் தான்; அடித்து சொல்கிறார் சீமான்!

தி.மு.க.,வின் ஓட்டு வெறும் 12 சதவீதம் மட்டும் தான்; அடித்து சொல்கிறார் சீமான்!

Latest Tamil News
மதுரை: தி.மு.க.,வின் ஓட்டு வெறும் 12 சதவீதம் மட்டும் தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் சீமான் நிருபர்களை சந்தித்தார். அப்போது, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் பதில் அளித்தார். அதன் விபரம் பின்வருமாறு:

நிருபர்: த.வெ.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான் தி.மு.க.,வை வீழ்த்த முடியும் என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே?

12 சதவீதம் மட்டும் தான்!

சீமான் பதில்: அவ்வளவு பெரிய எதிரியாக நான் பார்க்கவில்லை. தி.மு.க., அவ்வளவு பெரிய எதிரி அல்ல. தி.மு.க.,வின் ஓட்டு 12 சதவீதம் தான். எல்லா கூட்டணிகளையும் சேர்த்து கொண்டு, பா.ஜ.,வின் பூச்சாண்டியை காட்டி, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் 18 சதவீத ஓட்டுகளை பெறுகிறது.

பா.ஜ.,வுக்கு எதிராக, இந்தியா, பாகிஸ்தான் போல பகை உணர்வை தி.மு.க., உருவாக்கி வைத்து இருக்கிறது. அவ்வளவு பெரிய வீழ்த்த முடியாத எதிரி அல்ல திமுக. எல்லாரும் சேர்ந்து தான் வீழ்த்த முடியும் என்ற அளவுக்கு கொம்பன் அல்ல.

நிருபர்: தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெங்களூருவில் தக் லைப் பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது.

சீமான்: உண்மையை உணராத கூட்டம்; வரலாறு தெரிந்தால் எதிர்க்க மாட்டார்கள்; அண்ணன் கமல்ஹாசன் சொன்னது உண்மை. தமிழிலிருந்து கன்னடம் உருவானது. கமல்ஹாசன் பேசியது உண்மை, சத்தியம்.

நிருபர்: கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே?

வெற்று தீர்மானம்


சீமான்: தீர்மானத்தை தீயை வைத்து கொளுத்துங்கள். கொடுக்கும் போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் பேச்சு கிடையாது. கச்சதீவை பறி கொடுக்கும் போது பார்லிமென்டில் எதிர்த்து பேசி வாதிட்டது யார்?

சும்மா ஏதாவது பேசி கொண்டு இருக்காதீர்கள். தீர்மானம் போட்டு இருக்கிறதா? அது வெற்று தீர்மானம். இது எத்தனையாவது தீர்மானம் என்று முதலில் சொல்லுங்கள். இது பயன் அற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us