Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காமராஜர், இளைய காமராஜர் என்று சொல்லாதீர்கள்: விருது வழங்கும் விழாவில் விஜய் பேச்சு

காமராஜர், இளைய காமராஜர் என்று சொல்லாதீர்கள்: விருது வழங்கும் விழாவில் விஜய் பேச்சு

காமராஜர், இளைய காமராஜர் என்று சொல்லாதீர்கள்: விருது வழங்கும் விழாவில் விஜய் பேச்சு

காமராஜர், இளைய காமராஜர் என்று சொல்லாதீர்கள்: விருது வழங்கும் விழாவில் விஜய் பேச்சு

ADDED : ஜூன் 13, 2025 10:36 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''2026ம் ஆண்டு தேர்தல் பற்றியோ, காமராஜர், இளைய காமராஜர் என்று அப்படி எல்லாம் ஏதும் சொல்லாதீர்கள்'' என த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 13) 3ம் கட்டமாக 10, 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி த.வெ.க., தலைவர் விஜய் கவுரவித்தார். விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

எல்லோருக்கும் வணக்கம். நேற்று குஜராத்தில் ஒரு மிகப்பெரிய சோகமான விமான விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படத்தை பார்க்கும் போது மனது பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. இறந்தவர்கள் எல்லாருக்காகவும் 2 நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்துவோம். எல்லோரும் ரொம்ப துரத்தில் இருந்து வந்து இருக்கிறீர்கள்.

ஒரு சின்ன வேண்டுகோள். இந்த சந்தர்ப்பத்தில், யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். பேச்சை மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி கொள்ளலாம். 2026ம் ஆண்டு தேர்தல் பற்றியோ, காமராஜர், இளைய காமராஜர் அப்படி எல்லாம் ஏதும் சொல்லாதீர்கள். நீங்கள் உங்களுடைய ஆசிரியர், உங்கள் ஸ்கூல் பற்றி பேசுங்கள். மற்ற விஷயங்கள் பற்றி பேசுங்கள். தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் பேசாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, விருது வழங்கும் விழாவில், ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us