வார துவக்கத்தில் தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.65,680!
வார துவக்கத்தில் தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.65,680!
வார துவக்கத்தில் தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.65,680!
ADDED : மார் 17, 2025 10:09 AM

சென்னை: வார துவக்க நாளான இன்று (மார்ச் 17) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து, ஒரு சவரன் ரூ.65,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த வெள்ளி கிழமை மார்ச் 14ம் தேதி, எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,300 ரூபாய்க்கும், சவரன் 66,400 ரூபாய்க்கும் விற்பனையானது. சனிக்கிழமை மார்ச் 15ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 8,220 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 640 ரூபாய் சரிவடைந்து, 65,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், வார துவக்க நாளான இன்று (மார்ச் 17) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து, ஒரு சவரன் ரூ.65,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.