கூடியது தமிழக சட்டசபை; மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்
கூடியது தமிழக சட்டசபை; மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்
கூடியது தமிழக சட்டசபை; மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்
ADDED : மார் 17, 2025 10:14 AM

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 17) காலை 9.30 மணிக்கு கூடியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தங்கம் தென்னரசு மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று துவங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 17) காலை 9.30 மணிக்கு கூடியது.
பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் எம்.எம்.ஏ., பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சி முன்னறிவிப்பு கொடுத்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தை எழுப்ப அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
தொகுதி மறுவரையறை உட்பட சில பிரச்னைகளில், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே, ஒன்றரை மாதங்களுக்கு சட்டசபையில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.