அக்.3 அரசு விடுமுறை அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்
அக்.3 அரசு விடுமுறை அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்
அக்.3 அரசு விடுமுறை அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2025 02:09 AM
சென்னை:'தசரா பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்கு, அக்., 3ம்தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தி உள்ளார்.
அவர் முதல்வருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அக்., 1 ஆயுதபூஜை, 2ம்தேதி விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை புதன் மற்றும் வியாழக்கிழமை வருகிறது. ஆனால், 3ம் தேதி வெள்ளிக்கிழமை, அரசு வேலை நாளாக உள்ளது. அடுத்து 4ம்தேதி சனிக்கிழமை, 5ம் தேதி ஞாயிறு அரசு விடுமுறை நாட்களாக உள்ளன.
எனவே, 3ம் தேதி விடுமுறை நாளாக அரசு அறிவித்தால், ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும். தசரா பண்டிகையை, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவர்.
பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோர், விடுமுறையை நன்கு கொண்டாடிவிட்டு திங்கள் கிழமை பணிக்கு வருவர். ஒருநாள் விடுமுறை அளிக்காமல், 3ம் தேதி வேலைநாளாக இருந்தால், காலை பணிக்கு வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும்.
பள்ளி, கல்லுாரிகளுக்கு ஏற்கனவே, தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடும் வகையில், அக்., 3ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.