என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை வெளியிட தடை; ஐகோர்ட் கிளை உத்தரவு
என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை வெளியிட தடை; ஐகோர்ட் கிளை உத்தரவு
என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை வெளியிட தடை; ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : மார் 20, 2025 09:31 PM

மதுரை: சிறந்த பல்கலை, கல்லூரி என உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை நடப்பாண்டு வெளியிட ஐகோர்ட் கிளைஇடைக்கால தடை விதித்தது.
தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு வெளியிடும் தரவரிசை பட்டியலில், இடம்பெறும் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லை என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (மார்ச் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறந்த பல்கலை, கல்லூரி என உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை நடப்பாண்டு வெளியிட ஐகோர்ட் கிளை நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மத்திய கல்வி துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது.