சர்வதேச விண்வெளி மையத்தில் இந்தியா முன்னாள் இஸ்ரோ இயக்குனர் பேட்டி
சர்வதேச விண்வெளி மையத்தில் இந்தியா முன்னாள் இஸ்ரோ இயக்குனர் பேட்டி
சர்வதேச விண்வெளி மையத்தில் இந்தியா முன்னாள் இஸ்ரோ இயக்குனர் பேட்டி
ADDED : செப் 24, 2025 03:49 AM
திருச்சி:சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் போது, அதில், இந்தியாவும் இடம் பெறுவதற்கான தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்,'' என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
திருச்சிதனியார் நர்சிங் கல்லுாரி ஆண்டு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தாய் மொழியில் கல்வி கற்பவர்கள் சிறப்பாக வர முடியும். உயர்கல்வி படிக்கும் போது, ஆங்கிலத்திலும் தொய்வில்லாமல் இருக்க வேண்டும்.
உலக அளவிலான வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகி வருகிறது. உலக அளவில், விண்வெளி துறையில், சமுதாயத்திற்கான பணிகளை, முன்னுதாரணமாக இந்தியா செய்து கொண்டிருகிறது.நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் செல்வதற்கு சிக்கனமான வழிமுறைகளை செய்து காட்டியிருக்கிறோம். நமக்கு அதிகமான வாய்ப்புகள் வருவதற்கான சூழ்நிலை உள்ளது. அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சூரிய மண்டலத்தில், பூமிக்கு அடுத்து, செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது. சீதோஷ்ண நிலை வித்தியாசமாக இருந்தாலும், நீரும் ஒரு மாதிரியான வளிமண்டலம் இருப்பது, செவ்வாய் கிரகம் மனிதன் வாழ்வதற்கு உகந்ததாக இருக்கும்.
சர்வதேச நாடுகள் இணைந்து செவ்வாய் கிரகத்திற்கு அப்பால், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் போது, அதில் இந்தியாவும் இடம் பெறுவதற்கான தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.விண்வெளி துறையில், செயற்கை நுண்ணறிவு மிகவும் முக்கியமானது. ஏற்கனவே, ஏ.ஐ., தொழில் நுட்பம் பயன்பாட்டில் இருந்தாலும், அது, அடுத்த பரிணாமத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு, . அவர் . தெரிவித்தார்.