முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்
முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்
முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்
UPDATED : ஜூன் 24, 2025 07:58 AM
ADDED : ஜூன் 24, 2025 04:52 AM

மதுரை: மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் குன்றம் காக்க கோயிலை காக்க என்ற தலைப்பில் நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில், 5 லட்சம் பக்தர்கள் மனமுருகி பாடிய கந்த சஷ்டி கவசம் மொத்தமாக சோஷியல் மீடியாக்களில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பம், ஒரு கோடிக்கு மேலான பார்வையை கடந்துள்ளது.
அதிர்ச்சி
மாநாட்டின் இந்த தாக்கம் தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட மதுரை முருக பக்தர்கள் மாநாடு, பல்வேறு சவால்களுக்கு இடையே பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
மாநாட்டில் பங்கேற்றவர்களை கடந்து முகநுால், எக்ஸ் தளம், யு டியூப் சேனல்கள் மூலம் பல லட்சம் பேரை, மாநாடு செய்தி சென்று சேர்ந்திருக்கிறது.
குறிப்பாக, மாநாட்டில் பங்கேற்றோர் அனைவரும் இணைந்து, ஒரே நேரத்தில், ஒரே குரலாக கந்த சஷ்டி கவசம் பாடியது, சமூக வலைதளங்கள் வாயிலாக ஒரு கோடிக்கு மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது ஹிந்து தலைவர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டை முழுமையாக யுடியூப் வழியாக பார்வையிட்டுள்ளனர்.
சாதனை
அனுமதி பெற்ற டிவி சேனல்கள், யூ டியூப் சேனல்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நேரலையில், மாநாட்டை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இது ஒரு பிரமாண்ட சாதனை. ஆன்மிகத்திற்கு என ஒரு சக்தி உள்ளது என்பதை இம்மாநாடு நிரூபித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.