Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 16, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் உட்புகாமலிருக்க, வெட்டாற்றின் குறுக்கே, கடைமடை தடுப்பணை கட்ட, 49.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

தற்போது, தேர்வு செய்யப்பட்ட இடத்தை தவிர்த்து, அதே ஊரில் 2 கி.மீ., மேற்கில், புதிய இடத்தில் அணை கட்டுவதற்கான பணிகளை துவக்கி இருப்பது ஏற்புடையதல்ல.

இதனால், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களைச் சேர்ந்த, 32 கிராமங்களை சுற்றியுள்ள விவசாய நிலங்களின் தன்மை மாறுவதோடு, குடிநீர் உப்புநீராக மாறும் ஆபத்துள்ளது. அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும், தேர்வு செய்யப்படாத இடத்தில் தடுப்பணை கட்ட, தி.மு.க., அரசு கவனம் செலுத்துவது சரியா?

தி.மு.க., மாவட்ட செயலர் கவுதமிற்கும், அவரது உறவினர்களுக்கும், அந்த ஊரில் நிலம் உள்ளதாகவும், அவர்களின் வசதிக்கேற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்தி உலா வருகிறது.எனவே, மக்கள் நலன் கருதி தடுப்பணையை ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us