கிறிஸ்துவர் என்பதால் விஜய்க்கு சொம்பு துாக்குவதா: முருகானந்தம்
கிறிஸ்துவர் என்பதால் விஜய்க்கு சொம்பு துாக்குவதா: முருகானந்தம்
கிறிஸ்துவர் என்பதால் விஜய்க்கு சொம்பு துாக்குவதா: முருகானந்தம்
ADDED : ஜூன் 16, 2025 04:31 AM
புதுக்கோட்டை: ஹிந்து முன்னணி மாநில செயலர் முருகானந்தம் அளித்த பேட்டி:
கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன், 'கருப்பர் கூட்டம்' என்ற பெயரில், முருகக் கடவுளுக்கான கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பாடல்கள் பாடப்பட்டன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹிந்து முன்னணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தில், ஹிந்து கடவுள்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகின்றன. சினிமாவிலும் இதையே செய்கின்றனர். ஹிந்துக்களிடம் போதிய விழிப்புணர்வு இருந்திருந்தால், இதெல்லாம் தொடர்ந்திருக்காது.
தற்போது ஹிந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே, மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, அதற்கான முயற்சியில் இறங்கியபோது, பலரும் எதிர்த்தனர்.
ஆனால், இப்போது நடிகர் விஜய் கிறிஸ்துவர் என்பதால், அவருக்கு பலரும் சொம்பு துாக்கிக் கொண்டு அலைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.