திருநெல்வேலியில் 9 பேருக்கு கொரோனா; சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
திருநெல்வேலியில் 9 பேருக்கு கொரோனா; சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
திருநெல்வேலியில் 9 பேருக்கு கொரோனா; சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ADDED : ஜூன் 10, 2025 04:43 PM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் 9 பேர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. புதுடில்லி, மஹாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. அதை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் திருநெல்வேலியில் 9 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 73 வயது முதியவர், சுத்தமல்லி பாரதி நகரைச் சேர்ந்த 56 வயது பெண்மணி ஆகியோருக்கு கொரோனா இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ரெட்டியார்பட்டி, பணகுடி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் குணம் அடைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.