ஆசிய தடகள தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம்: மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் வெள்ளி
ஆசிய தடகள தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம்: மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் வெள்ளி
ஆசிய தடகள தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம்: மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் வெள்ளி
ADDED : மே 28, 2025 05:06 PM

குமி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
தென் கொரியாவின் குமி நகரில் 26வது ஆசிய தடகளப்போட்டி நடைபெற்று வருகிறது. 343 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மொத்தம் 59 வீரர்கள், வீராங்கனைகள் ஆசிய தடகள போட்டிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய அணி வீரர்கள் ரூபால், சந்தோஷ்குமார் தமிழரசன், விஷால், சுபா வெங்கடேசன் ஆகியோர் இந்த் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளனர்.
பந்தய தூரத்தை 3.18 நிமிடங்களில் கடந்து தங்கத்தை தட்டிச் சென்றுள்ளனர். வெள்ளி பதக்கம் சீனாவுக்கு கிடைத்துள்ளது. பந்தய தூரத்தை சீன போட்டியாளர்கள் 3.20 நிமிடங்களில் கடந்தனர். இந்த போட்டியில் இலங்கைக்கு வெண்கலம் கிடைத்தது.
தடகள போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மும்முறை தாண்டுதலில் அவர் 16.90 மீட்டர் தாண்டினார். சீனாவின் ஜூஹூ யாமிங் 17.06மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
நடப்பு சாம்பியன் அப்துல்லா அபுபக்கர் 16.72மீ தாண்டி 4வது இடத்தையே பிடித்தார். கொரியாவின் ஜியுமிங் யு, 16.82 மீட்டர் தாண்டி வெண்கலம் வென்றார்.