ADDED : செப் 25, 2025 12:58 AM
உத்தராகண்ட் மாநி லம், டேராடூனில் உள்ள ராணுவ கல்லுாரியில், அடுத்தாண்டு எட்டாம் வகுப்பில் சேர, இந்தாண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், கணிதம், பொது அறிவு பாடங்களுடன் நேர்முக தேர்விலும் பங்கேற்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விபரங்களை, 'www.rimc.gov.in' என்ற இணையதளம் வாயிலாக பெறலாம்.
ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில், சரக்கு மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், நிலைய மேலாளர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர் உள்ளிட்ட, 8,875 காலியிடங்கள் உள்ளன.
இதற்கான தேர்வுகளை நடத்தி, இந்தாண்டே பணி நியமனம் செய்ய, ஆர்.ஆர்.பி., எனும், ரயில்வே தேர்வு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.