பழனிசாமி உருவப்படம் எரிப்பு காங்., போராட்டம்
பழனிசாமி உருவப்படம் எரிப்பு காங்., போராட்டம்
பழனிசாமி உருவப்படம் எரிப்பு காங்., போராட்டம்
ADDED : செப் 26, 2025 01:34 AM

சென்னை: நீலகிரியில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசுகையில், 'பிச்சைக்காரன் ஒட்டு போட்ட சட்டை போட்டிருப்பார் அல்லவா. அதுபோல தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் இருந்தவர்' என்றார்.
இந்நிலையில், சென்னை, வியாசர்பாடியில் பழனிசாமிக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, அசோக் பில்லர் அருகில், பழனிசாமியின் உருவபடத்தை கிழித்தனர். சென்னை மயிலாப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பழனிசாமி படத்தை எரித்தனர்.
திருச்சியில், சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில், பழனிசாமியின் உருவ பொம்மைக்கு காங்கிரசார் செருப்பு மாலை அணிவித்து, போராட்டம் நடத்தினர்.
இதேபோல, தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்துள்ளன.