ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு: ராம ரவிக்குமார் பேட்டி
ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு: ராம ரவிக்குமார் பேட்டி
ஓட்டு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு: ராம ரவிக்குமார் பேட்டி

அவர் கூறியதாவது:
ஏற்கனவே மலைமீது தீபம் ஏற்ற வேண்டும் என நேற்று முன்தினமே நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயில் நிர்வாகம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நேற்று மாலை 6:00 மணிக்குள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவர் என எதிர்பார்த்தோம். அதையும் செய்யவில்லை. தீபம் ஏற்கனவே ஏற்றிய மண்டபத்தில்தான் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும், அதிகாரிகள், மனுதாரருடன் 10 பேருக்கு சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புடன் மலைக்கு செல்ல வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவில் உள்ளது. அந்த உத்தரவு நகலை கொடுத்தோம்.
144 தடை உத்தரவு
அமலில் இருக்கும் நிலையில், பக்தர்களை அனுமதிக்காத அரசு போலீசாரை இத்தனை எண்ணிக்கையில் ஏன் அனுமதித்துள்ளது. இது சட்டத்திற்குள் வருமா, வராதா. எங்களையும், சி.ஐ.எஸ்.எப்., வீரர்களையும் கைது செய்ய சொல்கிறார்கள் என்றால் இது முழுக்க முழுக்க தமிழக அரசின் திட்டமிட்ட செயல்தான். அரசு மேல்முறையீடுக்கு சென்றுள்ளதாக சொல்கிறார்கள். நாங்கள் சட்டத்தின்படி நடப்போம். வெற்றி பெறுவோம் என்றார்.
அடிப்படை உரிமை பறிப்பு
அவரது வழக்கறிஞர் சாமிநாதன் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது அரசு, கோயில் நிர்வாகத்தின் கடமை. உத்தரவை இந்த இருதரப்புக்கும்தான் கொடுத்துள்ளனர். அவர்கள் உத்தரவை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்தான் தொடரமுடியும். இந்த தீபத்தை கார்த்திகை நாளில் மாலை 6:00 மணிக்குத்தான் ஏற்ற முடியும். இதற்கான உத்தரவை நேற்று முன்தினமே வழங்கி விட்டோம். அதற்கான எந்த வேலையிலும் கோயில் நிர்வாகம் செய்யவில்லை. இதற்காக கோயில் நிர்வாகத்தை மட்டுமே நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.


