செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/செய்திகள்/தமிழகம்/அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் சிறை நிரப்பும் போராட்டம்/அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் சிறை நிரப்பும் போராட்டம்
ADDED : செப் 26, 2025 01:18 AM
வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, டிச., 17ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்து இருந்தார். இந்நிலையில், அவருக்கு போட்டியாக, அதே கோரிக்கைக்காக, 'டிச., 5ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்தபோது, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், அதற்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்று, தடுத்து விட்டனர். முதல்வர் ஸ்டாலினிடம் பலமுறை வலியுறுத்தினோம். நம் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. எனவே, வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு; ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, வரும் டிச., 5ல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.