சென்னைக்கு செந்தில் பாலாஜி வழக்கு மாற்றம்
சென்னைக்கு செந்தில் பாலாஜி வழக்கு மாற்றம்
சென்னைக்கு செந்தில் பாலாஜி வழக்கு மாற்றம்
ADDED : செப் 25, 2025 12:40 AM
மதுரை:தமிழக மின் வாரியத்திற்கு மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக விசாரணை கோரியும் தாக்கலான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை மாவட்டம் மேக்கிழார்பட்டி ராஜ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், ''எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. அந்த அமர்வில் தான் இவ்வழக்கை விசாரிக்க முடியும்,'' என்றார்.
அதையடுத்து, நீதிபதிகள், இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்ற அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டனர்.