போலீஸ் துறை செயல்பாடு விமர்சித்த எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
போலீஸ் துறை செயல்பாடு விமர்சித்த எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
போலீஸ் துறை செயல்பாடு விமர்சித்த எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 14, 2025 06:14 AM

திருப்பூர்: போலீஸ் துறையின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்த திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகர போலீஸ் பிரிவில், சைபர் கிரைம் சிறப்பு எஸ்.ஐ.,யாக உள்ளவர் முருகன், 56. ஜூலை மாதம் உடுமலை குடிமங்கலம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தமிழக போலீஸ் துறையை விமர்சிக்கும் வகையில், முருகன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இது, உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாநகர போலீஸ் தலைமையிட துணை கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது. அதன் முடிவில், சிறப்பு எஸ்.ஐ., முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தெற்கு மாநகர துணை கமிஷனர் தீபா சத்யன் இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்தார்.