காலியிடங்கள் இருந்தும் பதவி உயர்வில்லை மூன்றாம் நிலை நுாலகர்கள் வேதனை
காலியிடங்கள் இருந்தும் பதவி உயர்வில்லை மூன்றாம் நிலை நுாலகர்கள் வேதனை
காலியிடங்கள் இருந்தும் பதவி உயர்வில்லை மூன்றாம் நிலை நுாலகர்கள் வேதனை
ADDED : செப் 25, 2025 12:09 AM
ராமநாதபுரம்:பொது நுாலகத்துறையில் நுாறுக்கும் மேற்பட்டஇரண்டாம் நிலை நுாலகர் பணியிடங்கள் காலியாக இருந்தும்பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்காமல் மூன்றாம்நிலை நுாலகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் மைய நுாலகங்கள், கிளைநுாலகங்கள், ஊர்ப்புற நுாலங்கள் மற்றும் பகுதி நேர நுாலகங்கள்உள்ளன.2024ல் 446 ஊர்ப்புற நுாலகர்களுக்கு மூன்றாம் நிலை நுாலகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதே சமயம் பலஆண்டுகளாக மூன்றாம் நிலை நுாலகராக பணிபுரிபவர்கள் பதவி உயர்விற்காக காத்திருக்கின்றனர்.
தற்போது இரண்டாம் நிலை நுாலகர் பணியிடங்கள் காலியாகஉள்ளன. அவ்விடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், பொதுநுாலகத்துறையில் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பதவி உயர்வுவழங்கப்படுகிறது. மூன்றாம் நிலை நுாலகர்கள்பதவி உயர்வு பெற 10 முதல் 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியநிலை உள்ளது. தற்போது நுாறுக்கு மேற்பட்ட இரண்டாம் நிலை நுாலகர்பணியிடங்கள் காலியாக உள்ளன. அவ்விடங்களில்பணி மூப்பு அடிப்படையில் தகுதியுள்ள மூன்றாம்நிலை நுாலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பொதுவாக நுாலகத்துறையில் பலஆண்டுகளாக பதவி உயர்விற்காக காத்திருக்கும் முதல் நிலை நுாலகர்கள்,ஆய்வாளர்கள் பலர் அதே பணியில் ஓய்வு பெறும் அவலம் உள்ளது என்றனர்.