Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்கிறது

தமிழகத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்கிறது

தமிழகத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்கிறது

தமிழகத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்கிறது

ADDED : ஜூன் 22, 2024 01:55 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இது தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு வெளியிட்ட அறிவிப்புகள்:

* 21 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.

* அடுத்த 20 நாட்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும்.

* புதிய மாநகராட்சிகள் குறித்த அறிவிப்புகள் இனி வெளியாகும்.

* தற்போது 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும்.

* நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139 ல் இருந்து 159 ஆக உயர்த்தப்படும்.

* சென்னையில் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* சென்னையில் தற்போது 89 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஒரு வார்டுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

*தெருநாய்கள் பிரச்னைகளில் இருந்து மக்களை காக்கும்பணிகளை அரசு மேற்கொள்ளும்

*கோவிட் காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

*தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதன் மூலம், அதன் எண்ணிக்கை குறைக்கப்படும்.

*சென்னையில் மழைக்காலங்களில் நீர் தேங்க மெட்ரோ ரயில் திட்டப் பணிகளே காரணம்.

* சென்னை போன்ற பெருநகரங்களில் மாடுகள் திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us