ADDED : அக் 01, 2025 08:13 AM

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் தொடர்பாக, ஊடக செய்திகளை படித்த பின்னரும், டிவிக்களில் பார்த்த பின்னரும், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இந்த சம்பவத்தில், எல்லா பக்கமும் பிழை உள்ளது. அந்த பிழைகளை எதிர்காலத்திலாவது திருத்திக் கொள்ள வேண்டும். இதற்கான என்னுடைய யோசனை அனைத்தையும் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தெரிவித்துள்ளேன். இதுபோன்று பல யோசனைகள் வரும். அந்த யோசனைகளை எல்லாம் கலந்து, நல்ல முடிவுகளை எடுத்து, அவற்றை அவர்கள் அமல்படுத்த வேண்டும். செய்வர் என நம்புகிறேன்.
- சிதம்பரம், முன்னாள் அமைச்சர், காங்.,


