கிராம சபை கூட்டம் அக்., 2ல் கிடையாது
கிராம சபை கூட்டம் அக்., 2ல் கிடையாது
கிராம சபை கூட்டம் அக்., 2ல் கிடையாது
ADDED : செப் 24, 2025 12:05 AM
சென்னை:விஜயதசமி பண்டிகை காரணமாக, அக்., 2ல் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், ஊரக வளர்ச்சி துறை வழிகாட்டுதல்படி, குடியரசு, சுதந்திரம், மே தினம், காந்தி ஜெயந்தி உட்பட பல்வேறு நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
அதன்படி, காந்தி ஜெயந்தி தினமான, அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு அதே நாளில் விஜயதசமி பண்டிகை வருகிறது.
எனவே, அன்றைய தினம் நடக்க இருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக அக்.,11ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த, ஊரக வளர்ச்சி துறை முடிவெடுத்துள்ளது.