அ.தி.மு.க.,வில் 48 அணிகள் உதயநிதி கிண்டல்
அ.தி.மு.க.,வில் 48 அணிகள் உதயநிதி கிண்டல்
அ.தி.மு.க.,வில் 48 அணிகள் உதயநிதி கிண்டல்
ADDED : செப் 26, 2025 01:17 AM

மதுரை: துணை முதல்வர் உதயநிதி பேட்டி:
தி.மு.க.,வில் இளைஞரணி, விவசாய அணி என 25 அணிகள் உள்ளன. ஆனால், அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் அணி என 48 அணிகள் இருக்கின்றன.
அ.தி.மு.க., என்ன செய்ய வேண்டும் என்பதை டில்லி முடிவெடுக்கிறது. டில்லி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயிக்கிறார்.
பச்சை பஸ்சில் செல்லும் பழனிசாமி, ஆம்புலன்சை பார்த்தால் கோபம் அடைகிறார். ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வும் ஆம்புலன்சில் ஏற்றி விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.