அரசு நிகழ்ச்சி என்பதால் அரசியலுக்கு 'நோ' துரை வைகோ புது 'ரூட்'
அரசு நிகழ்ச்சி என்பதால் அரசியலுக்கு 'நோ' துரை வைகோ புது 'ரூட்'
அரசு நிகழ்ச்சி என்பதால் அரசியலுக்கு 'நோ' துரை வைகோ புது 'ரூட்'
ADDED : ஜூன் 10, 2025 04:54 AM

திருச்சி: அரசுப்பணி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, அரசியல் கேள்விகளை தவிர்ப்பதாக துரை வைகோ தெரிவித்தார்.
திருச்சி எம்.பி.,யும் ம.தி.மு.க., முதன்மை செயலருமான துரை வைகோ, தொகுதியில் முகாமிட்டு அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மே 28ல் திருச்சி வந்த அவர், தொகுதியில் நேற்று வரை சுற்றுப்பயணம் செய்தார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த உதவி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, அரசியல் தொடர்பாக அவரிடம் கேள்விகள் எழுப்பியபோது, 'அரசு நிகழ்ச்சியில், அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம். அதற்கு தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன்' என கூறி விட்டார்.
அதுபோலவே, ஐ.டி., பார்க் சாலை விரிவாக்கம், சோழமாதேவியில் புதிய பாலம் கட்டுதல், திருவெறும்பூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டை இணைக்கும் சாலை, ரயில்வே ஸ்டேஷன் சுரங்கப்பாதை என பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற அவர், ஓரிடத்தில் கூட அரசியல் பற்றி எதுவும் கூறவில்லை. ஆய்வுப்பணிகளை மட்டுமே மேற்கொண்டார்.