Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பரமக்குடியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது

பரமக்குடியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது

பரமக்குடியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது

பரமக்குடியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது

ADDED : அக் 06, 2025 09:39 PM


Google News
Latest Tamil News
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக கடந்த 30 வருடங்களுக்கு முன்பு 3 சென்ட் இடத்திற்கு டி.நமுனா பட்டா வழங்கப்பட்டுள்ளது. தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேந்தோணி குரூப் வி.ஏ.ஓ செல்வகுமாரை 44, கடந்த 8 நாள்களுக்கு முன்பு அவர் சந்தித்துள்ளார்.

அப்போது டி.நமுனா பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என வி.ஏ.ஓ., கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு

போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து இரவு ரசாயனம் தடவிய பணத்தை வி.ஏ.ஓ.செல்வகுமாரிடம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us