அழித்தார் விபூதி; எடுத்தார் 'செல்பி' திருமாவளவனின் அவசர கெட்டப்
அழித்தார் விபூதி; எடுத்தார் 'செல்பி' திருமாவளவனின் அவசர கெட்டப்
அழித்தார் விபூதி; எடுத்தார் 'செல்பி' திருமாவளவனின் அவசர கெட்டப்
ADDED : ஜூன் 20, 2025 04:19 AM

திருப்பரங்குன்றம் : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நேற்று காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். பின் பெரிய ரத வீதி பள்ளிவாசலில் திருப்பரங்குன்றம் மலை பிரச்னை குறித்து அதன் நிர்வாகிகளிடம் விசாரித்தார்.
தொடர்ந்து அவர் மலை மீது சிறிது துாரம் சென்று பழனி ஆண்டவர் கோவில் சன்னிதி முன் நின்று விஷயங்களை கேட்டறிந்தார்.
பின், திருப்பரங்குன்றம் கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு மரியாதை செய்து நெற்றியில் விபூதியிடப்பட்டது. அவருடன் கட்சியினருக்கும் விபூதி பூசப்பட்டது.
தரிசனம் முடித்து திரும்பும் நிலையில், கோவிலுக்குள் வந்த ஒரு தம்பதி, திருமாவளவனை பார்த்ததும் அவருடன் செல்பி எடுக்க விரும்பினர்.
அவர்களின் செல்போனை வாங்கிய திருமாவளவன், தன் நெற்றியில் உள்ள விபூதியை அழித்துவிட்டு, அத்தம்பதியுடன் சேர்ந்து, அவரே செல்பி எடுத்துக் கொடுத்தார். இதற்கிடையே, விபூதியை அழித்தது குறித்து திருமாவளவனிடம் கேட்ட போது, ''ஆறு மணி நேரமாக நெற்றியில் விபூதி வைத்திருந்தேன். அதை யாரும் கவனிக்கவில்லை. நாள் முழுதும் விபூதியை நெற்றியில் வைத்திருக்க முடியுமா,'' என எதிர் கேள்வி எழுப்பினார்.