டென்மார்க் பிரதமர் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்
டென்மார்க் பிரதமர் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்
டென்மார்க் பிரதமர் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்
ADDED : ஜூன் 09, 2024 03:33 AM

கோபனேஹன்: ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் பெண் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. அவரை தாக்கிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில், டென்மார்க்கின் பெண் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், கோபனேஹனில் உள்ள பாதசாரிகள் சதுக்கத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 39 வயது நபர் ஒருவர் வேகமாக வந்து, பிரெடெரிக்சனை வேகமாக தள்ளியுள்ளார். ஆனால், இதில் அவருக்கு எந்தக் காயமும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
ஆனால், பிரதமர் அதிர்ச்சி அடைந்தார் என, அவருடைய பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமரை தாக்கிய நபரை, பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவம், டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்டுத் தலைவர்கள், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ, சமீபத்தில் மர்ம நபரால் சுடப்பட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இதைத் தவிர, ஐரோப்பிய நாடுகளில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மீது, சமீபத்தில் பல தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்த வரிசையில், டென்மார்க் பெண் பிரதமர் மீது தாக்குதல் நடந்துள்ளது, அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.