42 பெண்களை கொன்ற தொடர் கொலைகாரன் கைது
42 பெண்களை கொன்ற தொடர் கொலைகாரன் கைது
42 பெண்களை கொன்ற தொடர் கொலைகாரன் கைது
ADDED : ஜூலை 17, 2024 01:20 AM

நைரோபி, கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், கடந்த இரண்டு ஆண்டுகளில், தன் மனைவி உட்பட, 42 பெண்களை கொலை செய்த தொடர் கொலைகாரனை போலீசார் கைது செய்தனர்.
கென்யாவின் நைரோபியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத குவாரி பகுதியில், இளம்பெண்களின் உடல்களை போலீசார் அடுத்தடுத்து கண்டெடுத்தனர்.
இது தொடர்பான விசாரணையின் போது, காலின்ஸ் ஜூமைசி கலுஷா, 33, என்ற நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, 2022 முதல் தன் மனைவி உட்பட, 42 பெண்களை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். பெண்களை கொன்று உடல்களை குவாரியில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார்.
கொலை செய்யப்பட்ட பெண்கள் அனைவரும், 18 - 30வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கலாம், என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணை அதிகாரி முகமது அமீன் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன், நைரோபியில் உள்ள, கைவிடப்பட்ட குவாரியில் பல உடல்கள் சாக்குப் பைகளில் கட்டப்பட்டு கிடந்ததை கண்டுபிடித்தோம். சந்தேகத்தின் அடிப்படையில், குவாரிக்கு அருகில் வசிக்கும் காலின்ஸ் ஜூமைசை விசாரித்ததில் உண்மை வெளிப்பட்டது.
கொலையாளியின் வீட்டில் நடத்திய சோதனையில், பல மொபைல் போன்கள், அடையாள அட்டைகள், உடல்களை வெட்டப் பயன்படுத்திய கத்தி, ரப்பர் கையுறைகள் மற்றும் நைலான் சாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுவரை கிடைத்த 9 உடல்களில், 8 பேர் பெண்கள் என பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
இவ்வாறு கூறினார்.