அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி: 10 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி: 10 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி: 10 பேர் காயம்
ADDED : ஜூன் 22, 2024 08:09 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமுற்றனர். இங்கு துப்பாக்கிச்சூடு அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மளிகைக்கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்கள் மீது 44 வயதான நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
10 பேர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சட்ட அமலாக்க அதிகாரிகள் ஆவர். இவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆர்கன்சாஸின் நியூ எடின்பர்க் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டிராவிஸ் யூஜின் போஸி என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் டிராவிஸ் யூஜின் போஸியை தேடி வருகின்றனர். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன.