தற்கொலை படை தாக்குதலில் 14 பேர் பலி
தற்கொலை படை தாக்குதலில் 14 பேர் பலி
தற்கொலை படை தாக்குதலில் 14 பேர் பலி
ADDED : செப் 04, 2025 06:32 AM
பலுசிஸ்தான்; நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பலுசிஸ்தான் மாகாணம். இங்கு பலுச் தலைவரும் மாகாண முன்னாள் முதல்வருமான அதுல்லா மேங்கல்லின் நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் தலைநகர் குயட்டாவில் பேரணி நடத்தப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். ஸ்டேடியம் ஒன்றின் கார் பார்க்கிங் பகுதியில் திரண்டிருந்த கூட்டத்தில் ஊடுருவிய தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் திடீரென உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 18க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.