ஒரே காரில் பயணம் செய்த ரஷ்யா - வடகொரியா அதிபர்கள்
ஒரே காரில் பயணம் செய்த ரஷ்யா - வடகொரியா அதிபர்கள்
ஒரே காரில் பயணம் செய்த ரஷ்யா - வடகொரியா அதிபர்கள்
ADDED : செப் 04, 2025 06:32 AM
நம் அண்டை நாடான சீனாவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், ஒரே காரில் பயணம் செய்தனர். இரு தரப்பு பேச்சுக்கு முன், காரில் அமர்ந்தவாறு இருவரும், 45 நிமிடங்கள் தனியாக பேசினர்.
இந்நிலையில், இரண்டாம் உலகப் போர் வெற்றி தினக் கொண்டாட்டம், பீஜிங்கில் நேற்று நடந்தது. இதில், 25 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பு தான். உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, கிம் ஜாங் உன் மற்றும் புடின் சந்தித்து பேசினர். இதற்காக இருவரும், புடினின் காரில் ஒன்றாக பயணம் செய்தனர். உக்ரைன் போர் தொடர்பாக இருவரும் பேசினர்.