அடச்சே, இப்படியுமா இருப்பாரு அப்பா; காருக்குள் துடிதுடித்த பச்சிளம் குழந்தை: கேட்கவே உடல் நடுங்கும் கொடுமை!
அடச்சே, இப்படியுமா இருப்பாரு அப்பா; காருக்குள் துடிதுடித்த பச்சிளம் குழந்தை: கேட்கவே உடல் நடுங்கும் கொடுமை!
அடச்சே, இப்படியுமா இருப்பாரு அப்பா; காருக்குள் துடிதுடித்த பச்சிளம் குழந்தை: கேட்கவே உடல் நடுங்கும் கொடுமை!
UPDATED : ஆக 03, 2024 11:19 AM
ADDED : ஆக 03, 2024 11:16 AM

வாஷிங்டன்: தந்தை வீடியோ கேமில் மூழ்கிய நிலையில், காருக்குள் வெப்பத்தில் துடிதுடித்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
முந்தைய காலத்தில் ஒரு வீட்டில் 10க்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். அப்போது கூட பெற்றோர் குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்த்தனர். தற்போதைய காலத்தில், ஒரு வீட்டில் 2 குழந்தைகள் தான் உள்ளனர். ஆனால் பெற்றோர் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமல், வேலை மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவற்றில் மூழ்கி போகியுள்ளனர். பெற்றோர் அஜாக்கிரதையால், ஆழ்துளை கிணறு உள்ளிட்டவற்றில் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகம் நடக்கின்றன.
காருக்குள் குழந்தை
அந்தவகையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில், வெளியில் சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது. குழந்தையை மீட்டு தாய் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது குழந்தை உயிரிழந்துவிட்டது என டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால், துடிதுடித்து உயிரிழந்தது தெரிய வந்தது.
வீடியோ கேம்
குழந்தையின் தந்தை, வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். குழந்தையை காரில் விட்டுவிட்டு, வீட்டுக்குள் சென்றவர் மறந்தபடி வீடியோ கேமில் மூழ்கியுள்ளார். காரில் 3 மணி நேரத்திற்கு மேலாக, ஏசி ஓடாத நிலையில், குழந்தை வெப்பத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.